•4:58 AM
"உன்னாணை சொல்லுறன் கேளடி, உவன் பேசாமப் பறையாமைத் தான் போயிட்டான்"
"என்னானை நீ அந்த வீட்டுப் படி மிதிக்கக் கூடாது சொல்லிப் போட்டன்"
"அம்மாவாணை நான் அங்கை இனிப் போக மாட்டன்"
மேற்கண்ட வாக்கியங்களில் தொக்கி நிற்பது "ஆணை" என்ற பதமாகும். ஒருவர் தன்னை முழுதும் நம்பும் படியாகச் சத்தியம் செய்வதையே "ஆணை" என்ற பதத்தினை இணைத்து முன் சொன்னவாறு ஈழப் பேச்சு வழக்கில் புழக்கத்த்இல் இருக்கும்.
"நிசமாத்தான் சொல்றேன்" என்ற தமிழக வழக்கினையே ஈழமொழிவழக்கில் "உன்னாணைச் சொல்லுறன்"போன்ற சொற்களை இணைத்துப் பாவிப்பது வழக்கம்.
பொதுவாக ஒருவர் சத்தியம் செய்தால் அதை மீறக்கூடாது, மீறினால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்பது ஒரு விதமான நம்பிக்கை. அதையே தாய், தந்தை விசேஷமான ஆயுதமாகப் பாவித்து "என்னாணை", "அம்மாவாணை" என்று இணைத்துச் சொன்னால் அதற்கு மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலை தான் ;). அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்றால் குறித்த அந்தப் பெரியவர் "ஆணை விட்டுட்டன்" என்று சொல்ல வேண்டும். இப்படியான வேடிக்கையான வழமையை ஈழத்தில் இன்றும் காணலாம். தமிழகத்தில் இப்படியான நிலை இருக்கிறதா என்ன?
"அம்மாவாணை நீ படம் பார்க்கப் போகக்கூடாது"
"என்ரை அம்மாவெல்லே, ஆணை விடணை ஆணை விடு"
11 comments:
எங்க ஊர் பக்கம் இந்த சொல் வழக்குல இருக்கு பாஸ்
பாம்பரணைன்னு ஒரு விஷ ஜந்து அதைப்பாத்தா ஆணை ஆணைன்னு சொன்னா ஆணைக்கு கட்டுப்பட்டு அந்த இடத்திலேயே நிக்கும்னு எங்க வீட்டு வேலைக்காரம்மா சொல்லியிருக்காங்க. அவங்க அடிக்கற வரைக்கும் அங்கயே இருக்கும் பாவம். அது ஞாபகத்துக்கு வந்துச்சு பாஸ்
நாங்களும் சின்ன வயசில பாவிச்சது தான்....ஆயிரம் தான் இருந்தாலும் எங்கட ஊர் தமிழை கேக்கேக்க வாற சந்தோசமே தனி.....
நான்அம்மாட்ட அம்மாவாணை படம் பாக்க மாட்டன் என்டு சத்தியம் பண்ணீட்டு பின்பக்கத்தால ஓடி படம் பார்த்த ஆள்... அதுக்காக என்னை நம்பேலாது என்டு நக்கல் பண்ணப்பிடாது.
எனக்கு தெரிந்து,தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இப்படி ஆணையிடும் பழக்கம் உள்ளது.
சத்தியத்துக்குக்கட்டுப்பட்டது அந்தக்காலம். அது ஒரு பொன்னானகாலம். கொப்புவாணை,கோத்தையாணை என்றும் சிலர் சத்தியம் செய்வார்கள்.
அன்புடன்
வர்மா
'உன்னாணை' என்பதை 'உண்ணாணை' என்று உச்சரிக்க கேட்டிருக்கிறன். அம்மாவாணையும் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் உந்த 'ஆணை விடுற' விசயம் எனக்குத் தெரியாது. அது வழக்கத்துல, எங்கட ஊரில இல்லாமப் போச்சோ தெரியேல்லை.
புதுகைத் தென்றல்
சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும் நன்றி
தாருகாசினி
நீங்களும் இனி எழுதலாம் ;)
விசரன் said...
நான்அம்மாட்ட அம்மாவாணை படம் பாக்க மாட்டன் என்டு சத்தியம் பண்ணீட்டு பின்பக்கத்தால ஓடி படம் பார்த்த ஆள்... அதுக்காக என்னை நம்பேலாது என்டு நக்கல் பண்ணப்பிடாது.
//
அண்ணை, நீங்கள் பேக்காய் ;)
மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி!
கிறிச்சான் said...
எனக்கு தெரிந்து,தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இப்படி ஆணையிடும் பழக்கம் உள்ளது.
//
வணக்கம் நண்பரே
இப்படியான பதிவுகளை இடும் போது பல பொதுவான ஈழ வழக்குகள் குமரிப்பகுதிக்கும் பொருத்தமாக இருப்பதாக உங்களைப் போன்ற நண்பர்கள் மூலம் அறிய முடிகின்றது.
வருகைக்கு நன்றி வர்மா
கலை
ஆணை பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாதா, உங்கட ஊரில் மீண்டும் விசாரிச்சுப் பாருங்கோ
மிக்க நன்றி பனித்துளி சங்கர்
ஆணை சேர்த்து சொல்வது தெரியும். உண்ணாணை, அம்மாவாணை எல்லாம் தெரியும். ஆனா பிறகு அந்த ‘ஆணை முறிக்கிறது' அல்லது ‘ஆணை விட்டிட்டன்' எண்டு சொல்லி செய்யுறதுதான் தெரியாது. :)
எனக்குத் தெரிந்தது மிகவும் முக்கியமான சத்தியங்கள் இல்லை. கதையோட கதையா, சொல்லுற ‘உண்ணாணை'.
எங்கட அம்மாக்கு சத்தியம் செய்வதே பிடிக்காது. அதால எங்கட வீட்டுல ஒருத்தரும் சத்தியம் செய்யுறேல்லை :)