•1:26 AM
"வெள்ளென எழும்பி இறைப்புக்குக் போக வேணும்" இது கிராமப்புறங்களில் சரளமாகப் பாவிக்கும் ஒரு உரையாடல் வாக்கியம். இங்கே வெள்ளென என்பது சீக்கிரமாக, வேகமாக போன்ற பதங்களின் ஒத்த சொல்லாக அமைகின்றது. வெள்ளென என்பது எவ்வளவு தூரம் தமிழக மொழிவழக்கில் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் ஈழத்தில் இந்தச் சொல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. (கிழக்கு) வெளுப்பானதும் என்பது மருவி வெள்ளென என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன். வெள்ளென என்பதை எழுத்து வழக்கில் பயன்படுத்துவது மிகக்குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.
வெள்ளென என்பதைப் பற்றிப் பேசும் போது "வெள்ளாமை" என்பதைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியவில்லை. வேளாண்மை என்பது விவசாயம் செய்வது என்பதன் பொருளாக அமைவது எல்லோருக்கும் தெரியும். இந்த வேளாண்மை என்பதைப் பேச்சு வழக்கில் வெள்ளாமை என்பதாகப் பாவிப்பதும் ஈழத்துப் பேச்சுவழக்கில் அவதானிக்கக் கூடியதொன்று.
காலைநேரம் என்பதை ஈழத்துப் பிரதேசத்துப் பேச்சு வழக்கில் "காலமை" என்று தான் அதிகம் பயன்படுத்துவார்கள். மூலச் சொல்லில் இருந்து விலகி "மை" என்ற எழுத்தையும் இணைத்ததான இந்த காலமை என்ற பதம் எப்படிவந்தது என்று தெரியவில்லை. "காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்பதை "காலமை தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்று பாடினாலும் சந்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது இல்லையா?
Picture: Dushiyanthini Kanagasabapathipillai

11 comments:
வெள்ளென.. வெள்ளாமை..இரண்டும் இன்னும் தமிழக ஊர்களில் வழக்கில் உள்ளன.
காலமை எனக்கு புதிய சொல்!!
திண்டுக்கல், மதுரை பக்கங்களில் 'வெள்ளென' வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்! அதே போல 'காலமே' என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்../"காலமை தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" /
கானா டச்! :-)
காலைவேளையில் சூரியக்கதிர் வெளிப்பட முன்னர் இருக்கின்ற லேசான இருட்டை மையிருட்டுப்பொழுது எனவும் கூறுவதுண்டு. காலை+மையிருட்டு சேர்ந்து காலமை என மருவியிருக்கலாம்.
'காலமை' யை, 'விடிய' அல்லது ‘விடியக் காத்தால' என்றும் சொல்லக் கேட்டிருக்கிறன்.
அருமையான் விளக்கம்.....நம்ம ஊர் தமிழ் கேட்டதுபோல இருக்கு
hai prabha nanum eza virumbi than
tamil ezathai patri esinale kangalil neer sorigiradhu
படமும் நல்லாருக்கு. போறதார்? பிரபாவோ? :-)
பேச்சு வழக்கில "வெள்ளென "எண்ட சொல்லை நாங்கள் "வெள்ளெண" எண்டு தான் பாவிக்கிறனாங்கள்..ஒரு சுழி வித்தியாசம்...:)உங்க இடத்தில பாவிக்கிறது வித்தியாசமோ தெரியேல்ல....
kalangathala endum solrathello prabanna?
வருகைக்கு நன்றி செந்தில் நாதன்
சந்தனமுல்லை
நம்ம டச்சையும் போடணும் இல்ல ;)
பிரகாஷ்
தங்கள் விளக்கம் ஏற்புடையதாகத் தான் இருக்கு, மிக்க நன்றி
கலை
விடியக்காத்தாலை என்பதும் புழக்கத்தில் இருக்கு நான் சொல்ல மறந்துட்டன்
நிலாமதி
வருகைக்கு மிக்க நன்றி
விஜய்
மிக்க நன்றி
மணிமேகலா said...
படமும் நல்லாருக்கு. போறதார்? பிரபாவோ? :-)//
ஆகா என்னை கடலுக்கை தள்ளப்பார்க்கிறீங்கள் ;)
சினேகிதி
நீங்கள் சொல்றதை விட்டுட்டேன், நன்றி ஞாபகப்படுத்தியதற்கு