* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில 'துலை' என்பது ‘தொலை தூரம்' எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.
* "கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்' என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. 'கனக்க' நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. 'கனக்க' என்பது ‘கனதியான' எண்டதில இருந்து வந்திருக்குமோ?
* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, 'மெலிந்து' எண்டதைக் குறிக்குது. 'வயக்கெட்டு' எண்டது ‘வயசு கெட்டு' எண்ட அர்த்ததி்ல வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.

2 comments:
மூன்று சொற்களை ஒரு பதிவில் காட்டியிருக்கிறீர்கள் நன்றி
அசல் ஊர் சொல்லுகள்!இன்னும் சொல்லுங்கோ.