Author: யசோதா.பத்மநாதன்
•3:35 PM

கொட்டைப் பெட்டி;-

யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறையில் பனையும் பனை சார்ந்த பொருட்களும் பெறும் முக்கியத்துவம் பற்றி பல பதிவுகள் சிறப்பான முறையில் வெளி வந்திருக்கின்றன.அதிலொன்று இந்தக் கொட்டைப் பெட்டி.

பனையோலையில் செய்யப் படும் மிகச் சிறிய, கலைத்துவம் வாய்ந்த, அழகழகான வண்ணங்களில் கிடைக்கும் கொட்டைப் பெட்டிகளின் பயன்பாடு இக்காலங்களில் மிகக் குறைந்து விட்டது அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

முன்னைய காலங்களில் காசுகள் வைக்கும் ஒன்றாக; வெத்திலை பாக்கு வைக்கும் பெட்டியாகப் பொதுவாகப் பெண்களால் பாவிக்கப் பட்டது. அவை உட்புறமாக 2, 3, அடுக்குகளாகவும் காணப்படும்.அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக உட்புறமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.அதனை விடச் சற்றே பெரிதான மூடியினால் மூடி பின் புறம் கொய்யகம் வைத்து உடுத்திய சேலையின் இடுப்புப் பக்க சேலை மடிப்பொன்றில் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.

அந்தக் காலத்து யாழ்ப்பாணப் பெண்களின் wallet இது தான்.

ஆணகள் வேட்டி மடிப்புகளுக்குள்ளும் சேட் பொக்கட்டுக்களுக்குள்ளும் தம் பொருட்களைப் பத்திரப் படுத்தி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
This entry was posted on 3:35 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On June 22, 2010 at 6:31 AM , பெயர் குறிப்பிட விரும்பாதவன் said...

பழைய ஆச்சிமார் பணத்தினைப் பாதுகாப்பாக வைக்க நெஞ்சுச் சட்டையினையும் பாவிப்பார்கள். இதுவும் எங்கள் ஈழத்தில் வழக்கமான ஒன்று.

 
On June 24, 2010 at 4:02 AM , ஹேமா said...

இப்படியான் கொட்டப் பெட்டிகளை தமிழ்ப்பகுதிகளை விட சிங்களப் பகுதிகளில் நிறையப் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

 
On June 26, 2010 at 2:26 AM , யசோதா.பத்மநாதன் said...

அப்படியா ஹேமா? அவர்களே அதனைச் செய்கிறார்களா?

பனை வடபகுதியில் மட்டும் தான் இருப்பதாக நான் நினைத்தேன்.

வரவுக்கும்,தகவலுக்கும் நன்றி ஹேமாவுக்கும் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாதவருக்கும்.

 
On June 27, 2010 at 9:58 AM , Pragash said...

இன்னும் வழக்கில் இருந்து விடுபட்டுப்போன பனை சார்ந்த பொருட்கள் எவ்வளவோ? அருமையான மீள்நினைவுப்பதிவு.