ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் கடந்த ஜூன் 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, நேற்று ஜீன் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட திருப்பலியோடு திருச்சொருப பவனியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பெருநாள் இந்த ஆண்டோடு 160 ஆவது ஆண்டாகச் சிறப்புற நடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிகழ்வில் காலை 5.15 இற்கு முதலாவது திருப்பலியைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியினை யாழ் ஆண்டகை திரு தோமஸ் செளந்தரநாயகம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக் கொடுத்திருந்தார். மாலை 4.30 மணிக்கு திருச்சொரூப பவனி இடம்பெற்றிருந்தது.
காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற திருவிழாத் திருப்பலியின் சிறப்பு அஞ்சலை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திருமதி சோனா பிறின்ஸ், திரு பிறின்ஸ் இம்மானுவேல் இணைந்து தயாரித்து வழங்கிய இந்த நிகழ்வில் யாழில் இருந்து யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் அவர்கள் நேரடி வர்ணனையை திரு தாசீரியர் அவர்களின் தொழில்நுட்ப உதவியோடு வழங்கியிருந்தார். இரண்டரை மணி நேரமாக நடைபெற்றிருந்த இந்தச் சிறப்பு ஒலிப்பகிர்வை உலகெங்கும் வாழும் புனித அந்தோனியார் பக்தர்கள் கேட்டுப் பயன்பெறும் வகையில் அதனை இங்கே தருகின்றேன். பதிவில் இடம்பெறும் ஒளிப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற பெருவிழாப் படங்களாக பாஷையூர் இணையத்தில் இருந்து நன்றியோடு பகிரப்படுகின்றது.
0 comments: