Author: வர்மா
•8:31 AM

""அம்மா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. என்ன சாப்பாடு?''

""காலைப் பலகாரம்ஒன்றும் தேடவில்லை. மாமணல் ஒன்டும் இல்ல. பாண்வாங்கி வச்சிருக்கிறன் . இரவுக்கு இடியப்பம் அவிச்சுத் தாற‌ன்.''

""இடியப்பத்துக்கு என்ன அனுமானம்.?''
""சொதி வைச்சுத்தாறன்.''

வடமாராச்சியில் அதிகமாக நடை பெறும் சம்பாசனை இது.. காலையில் அல்லது இரவில் சாப்பிடும் தோசை, இடியப்பம், பிட்டு போன்றவற்றை பொதுவாகப் பலகாரம் என்பார்கள். அவற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் சம்பல், சொதி, சாம்பார் போன்றவற்றை அனுமானம் என்பார்கள்.

திருமணவைபவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு பலகாரம் சுடுவதற்கு வீட்டிற்கு வரும்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பார்கள். கொழும்பில் உள்ள உறவினர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கும் பலகாரம் அனுப்புவார்க்ள.

திருமண வைபவத்தில் பரிமாறப்படும் அரியதரம், முறுக்கு, லட்டு போன்றவற்றையும் பொதுவாக பலகாரம் என்பார்கள்.

உறவினர்களின், நண்பர்களின் வீட்டுக்குப்போகும் போது கடையில் பலகாரம் வேண்டுவோம் என்பார்கள். வடை, சுசியம், வாய்ப்பன் போன்றவற்றையும் பலகாரம் என்பார்கள். கடையில் வாங்கும் தோசை, இடியப்பம், இட்டலி என்பவற்றை கடையப்பம் என்றும் கூறுவார்கள்.

படஉதவி எம்.எஸ்.சலீம்
This entry was posted on 8:31 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 16, 2010 at 2:40 AM , கானா பிரபா said...

வணக்கம் வர்மா

பலகாரம் குறித்துச் சுவையான பகிர்வு, கடல் கடந்தாலும் பலகாரம் என்றே சொல்லிக் கொள்கிறோம்.

 
On July 16, 2010 at 9:49 AM , ஃபஹீமாஜஹான் said...

அரியதரம்,சுசியம், வாய்ப்பன் இவை என்னவென்றே தெரியவில்லை :(

இவற்றின் படங்களையும் இருந்தால் இந்தப் பதிவில் போட்டால் என்ன?