Author: வர்மா
•2:20 AM
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடமராச்சிக்கு மாற்றலாகிச் சென்றார். அரசாங்க உயரதிகாரியான அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். அவருடைய சகோதரி இலண்டனில் வசிக்கிறார். லண்டனில் வசிக்கும் தனது சகோதரிக்கு உணவுப்பொருட்களை அடிக்கடி அனுப்புவார்.
“லண்டனில் தங்கச்சி இருக்கிறா லண்டனுக்கு அனுப்புறதுக்கு இங்கை நல்ல சாப்பாட்டு சாமான் என்ன கிடைக்கும்” என்று வடமராச்சி அலுவலகத்திலுள்ள நண்பரிடம் கேட்டார்.
“புண்ணாக்கு” என்று வடமராச்சியைச் சேர்ந்த நபர் பக்கெ பதில் கூறினார். யாழ்ப்பாண அதிகாரி திகைத்தவிட்டார். அவருடைய திகைப்பைப் பொருட்படுத்தாத வடமராச்சி நண்பர் தொடர்ந்தார்.
“புண்ணாக்கு உடம்புக்கு நல்லது. பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் சொன்னால் கையால இடிச்சுத் தருவார்கள் நாங்களும் புண்ணாக்கைத்தான் அனுப்புகிறோம்” என்றார்.
யாழ்ப்பாண அதிகாரியின் திகைப்பை கொஞ்சநேரம் ரசித்த வடமராச்சி நண்பர். “எள்ளுப்பாகை நாங்கள் எள்ளு புண்ணாக்கு என்போம் சிலவேளை புண்ணாக்கு என்றும் சொல்வோம்” என்றார். கையால் இடித்த புண்ணாக்கு கடையில் வாங்குவதை விட சுவையாக இருக்கும். நீங்கள் வடமராச்சிக்கு போனால் புண்ணாக்கு வாங்க மறந்து போகாதையுங்கோ.

சகஜம்---------------------------------ஏற்றதாழ்வு இன்றிப் பழகுவது
பக்கெனபதில்--------------------உடனடியாக பதில்
கையால் இடிச்ச-------------உரலில் போட்டு உலக்கையால் இடிப்பது
This entry was posted on 2:20 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On July 4, 2010 at 2:28 AM , வர்மா said...

Varma anna,

nalla punnakku sapidugga

K.Malar

 
On July 4, 2010 at 2:58 AM , Pragash said...

சுத்தமா கழுவின எள்ளை கொஞ்சம் கொஞ்சம் அள்ளி வாயில் போட்டு மென்றால் அதுவும் ஒரு தனி ருசிதான்.

 
On July 4, 2010 at 3:52 AM , Anonymous said...

வலைத்தள நிர்வாகிகளுக்கு முதற்கண் எனது வணக்கமும் நன்றியும். இங்கே வரும் போதெல்லாம் எனக்கு வீட்டில் இருப்பது போலவே தோன்றும்.

படங்களைப் போட்டால் தெரியாதவர்களுக்கும் தெரிய வருமே. கண்டிப்பாகத் எடுத்து போடுங்கள் ப்ளீஸ். பல வரிகளில் எழுதுவதை ஒரு படம் சொல்லிவிடும்.

 
On July 4, 2010 at 3:52 AM , Anonymous said...

சிலர் தோல் நீக்காத எள்ளைப் போட்டு இடிப்பார்கள். சரியான கருப்பாக இருக்கும். கைக்கும். தோல் நீக்கின எள்ளு போட்டால் கொஞ்சம் மண்ணிற கலரில் இருக்கும். அதை விட, சிலர் எள்ளை இடிக்கும் போது வரும் எண்ணெய்யை எடுத்துப் போட்டும் புண்ணாக்கு செய்வார்கள். அதனால் நீங்களே வீட்டில் செய்வது நல்லது. மிக்சியில் கூட செய்யலாம். அம்மம்மா பனங்கட்டி போட்டி சிலவேளைகளில் இடிப்பா. சத்து என்று அம்மா இடிச்சு தீத்துவா. தோல் நீக்கின எள்ளு, சீனி போட்டு எண்ணெய் வழியும் எள்ளுப்பாகு தான் எனது சொய்ஸ் =))

 
On July 4, 2010 at 3:52 AM , Anonymous said...

ஒரு சந்தேகம். சகஜமா என்பது எங்கள் வழக்கில் இருக்கிறதா? பாவித்த ஞாபகம் இல்லை.

 
On July 4, 2010 at 3:53 AM , Anonymous said...

மிக்ஸி இருந்தால் இலகுவாகச் செய்யலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் மட்டும் பாக்காமல், நாங்களாகவே செய்து சாப்பிட்டால் நல்லது.

 
On July 4, 2010 at 3:53 AM , Anonymous said...

ஒரு எள்ளுப்பாகும் ஒரு கப்பல் வாழைப்பழமும் காலை உணவாக சாப்பிட்டாலே போதும். அதனால் தான் என்னவோ இந்த வயதிலும் எங்கள் பாட்டன்மார் பாட்டிமார் எங்களை விட நல்ல பலமா இருக்கினம்.

 
On July 4, 2010 at 3:55 AM , Anonymous said...

தமிலிஷ் ல் சேர்ந்தால் மற்றவர்கள் பார்வைக்கும் கிடைக்குமே. தமிழ்மண டூல் இருந்தும் ஆக்கங்களைப் பகிராது விட்டுள்ளீர்கள். அதைக் கொஞ்சம் கவனித்தால் நிறைப்பேருக்குப் போய்ச்சேரும். நன்றி.

 
On July 4, 2010 at 7:29 AM , வர்மா said...

PRAKASH said...
சுத்தமா கழுவின எள்ளை கொஞ்சம் கொஞ்சம் அள்ளி வாயில் போட்டு மென்றால் அதுவும் ஒரு தனி ருசிதான்.


வருகைக்கு நன்றி.

 
On July 4, 2010 at 7:29 AM , வர்மா said...

அனாமிகா துவாரகன் said...
மிக்ஸி இருந்தால் இலகுவாகச் செய்யலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் மட்டும் பாக்காமல், நாங்களாகவே செய்து சாப்பிட்டால் நல்லது.


சினச்சின்னத்தகவல்களுக்கு நன்றி.

 
On July 4, 2010 at 7:34 AM , வர்மா said...

அனாமிகா துவாரகன் said...
ஒரு சந்தேகம். சகஜமா என்பது எங்கள் வழக்கில் இருக்கிறதா? பாவித்த ஞாபகம் இல்லை.


வழக்கில் உள்ள சொல். என்.எஸ். கிருஷ்ணனின் பாடலில் உண்டு.