(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)
(கல்வெட்டுக்கள்)
(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)
(நீர்த் தொட்டி)
(மருத்துவத் தொட்டி)
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.
திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.
'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.
வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
7 comments:
படங்களும் தகவலும் பயனுடையவை.
அற்புதமான படங்கள் அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
good post. keep writing!
i have started to scribble recently. you can reach me at:
http://encounter-ekambaram-ips.blogspot.com/
happy blogging
மிக்க நன்றி மணிமேகலா , வி.என்.தங்கமணி, YUVARAJ S
அய்யா! அரை வட்ட வடிவில் இருப்பது சந்திர வட்டக்கல்லா?
ஆம் பின்னாட்களில் நிசங்கமல்லனால் இவ்விகாரை புணரமைப்பு செய்யப்பட்டது.
புதிய தகவல். நன்றி.!!