Author: கானா பிரபா
•3:18 AM
"ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்"

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் "குமர்ப்பெட்டை". பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.
This entry was posted on 3:18 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On February 28, 2010 at 6:33 AM , சந்தனமுல்லை said...

VTV எஃபெக்ட் இன்னும் மனசுலே நிக்குதா..பாஸ்! :-)

 
On March 1, 2010 at 4:11 AM , கானா பிரபா said...

ஆகா இங்கேயும் விதாவ

;)

 
On March 1, 2010 at 5:05 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

"பெடிச்சி/பொடிச்சி" என்டும் சொல்லுற பழக்கமிருக்கு

 
On March 21, 2010 at 9:13 PM , அன்புடன் மலிக்கா said...

நாங்களும் கற்றுக்கொள்கிறோம் உங்கட பாஷையை.

நல்ல பகிர்வு