Author: கானா பிரபா
•2:26 AM
"உவனுக்கு சோறு கறியை விடக் கள்ளத்தீனி தான் விருப்பம்" இது என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றி மற்றவர்களுக்குப் போட்டுக் கொடுக்கும் ஒரு கருத்து ;).

நாவுக்கு ருசியான தின்பண்டங்கள், குறிப்பாக அவற்றின் மூலம் எந்த விதமான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டிராத ஆனால் இனிப்பு அல்லது காரமான வகையறாக்களைத் தான் இப்படி "கள்ளத்தீனி" அல்லது "கள்ளத்தீன்" என்று அடையாளப் பெயர் கொண்டு எங்களூரில் அழைப்பார்கள். இதற்கு முன்னர் எழுதிய சொக்கிளேற்றும் விசுக்கோத்தும் பதிவில் இருக்கும் பெரும்பாலான பண்டங்கள் இந்தக் கள்ளத்தீனி வகையறாவுக்குள் அடங்கி நிற்கின்றன.

தமிழகத்தில் கள்ளத்தீனி என்ற சொலவாடை பாவிக்கப்படுகின்றதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு அவர்கள் சொல்லியிருந்தார் குமரி பகுதியில் கள்ளப் பண்டம் என்று அழைப்பார்களாம்.
This entry was posted on 2:26 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On January 30, 2010 at 2:43 AM , சந்தனமுல்லை said...

'கள்ளத்தீனி '- இந்த சொல் புதிதாக இருக்கிறது...நொறுக்குத்தீனி என்றே பழக்கம். ஒரு வேளை நீங்க கள்ளமா சாப்பிட்டதாலே இருக்குமோ?!! :-)

 
On January 30, 2010 at 3:59 AM , கானா பிரபா said...

வாங்க ஆச்சி

கள்ளமா சாப்பிடாமல் கண்ணுக்கு முன்னால் சாப்பிட்டாலும் கள்ளத்தீனி தானாம் ;)

 
On January 30, 2010 at 4:11 AM , தமிழ் said...

/
சந்தனமுல்லை said...
'கள்ளத்தீனி '- இந்த சொல் புதிதாக இருக்கிறது...நொறுக்குத்தீனி என்றே பழக்கம். ஒரு வேளை நீங்க கள்ளமா சாப்பிட்டதாலே இருக்குமோ?!! :-)

கானா பிரபா said...
வாங்க ஆச்சி

கள்ளமா சாப்பிடாமல் கண்ணுக்கு முன்னால் சாப்பிட்டாலும் கள்ளத்தீனி தானாம் ;)
/


:))))))))

 
On January 30, 2010 at 5:01 AM , Anonymous said...

//ஒரு வேளை நீங்க கள்ளமா சாப்பிட்டதாலே இருக்குமோ?!! :-)//
Cracked my head :D

 
On January 30, 2010 at 5:30 AM , துபாய் ராஜா said...

சிறுபிள்ளைகள் வீட்டுக்கு தெரியாமல் வாங்கி தின்பதால் இந்த பெயரோ... :))

 
On January 31, 2010 at 4:25 PM , யசோதா.பத்மநாதன் said...

நொட்டைத் தீனி என்றும் சொல்வதாக ஞாபகம்.

 
On February 13, 2010 at 2:46 PM , சஞ்சயன் said...

சக்கரை வியாதி வந்து நொந்து போயிருக்கிறன்.... நீங்கள் வெறுப்பை கிழப்புறீங்குளே...முருகா

 
On February 14, 2010 at 8:34 PM , Thamiz Priyan said...

எங்க வீட்ல இந்த சொல் பழக்கத்தில் இருந்தது.. (?).. அதாவது திருட்டுத்தனாமா திங்குறதை சொல்ல.. ;-)))