Author: வர்மா
•8:01 AM
மலைமகளே மாதரசியே
கலையூர்தியே கற்பகமே
முக்கண்ணன் நாயகியே
முக்கனியே வந்திடம்மா

நாரணியே தரணிபோற்றும்
பூரணியே வந்திடம்மா
பகையைதீர்த்திடம்மா வெற்றி
வாகையைத்தந்திடம்மா


நண்ணார்மிடுக்கொடிக்க
மண்ணிலேவந்திடம்மா
எல்லையிலாநாயகியே
தொல்லைகளைப்போக்கிடம்மா

திருப்பாற்கடலில்தோன்றியவளே
திருமாலைத்துணையாய் தேர்ந்தவளே
திருவேஉருவாய் உடையவளே
கருணைக்கண்காட்டிடம்மா

செங்கமலநாயகியேதாயே
மங்காதசெல்வம் தந்திடம்மா
திருமகள் எனும்நாமத்தவளே
திரும்பியேகொஞ்சம்பாரம்மா


செல்வத்துக்கதிபதியே
செல்வியே முண்டகாசினி
பெருந்தன்மைகாத்திடவே
பெருமலையைத்தந்திடம்மா


கலைகளின் நாயகியே
கலைவாணியே வந்திடம்மா
முத்தமிழைத்தந்திடம்மா
பக்தர் நாம்சிறப்புறவே

நான்முகன் கிழத்தியே
வெண்தோடகத்தில் இருப்பவளே
பண் இசைபாடிடவே
நாவினில் வந்திடம்மா

வெண்டாமரைத்தேவியே
கண்மலர்ந்துபார்த்திடம்மா
கலையரசியேமாதேவி
நிலையாகநின்றிடம்மா

அங்கையற்கண்ணியே போற்றி
அர்த்தநாரீஸ்வரியே போற்றி
அலையிடைப்பிறந்தவளேபோற்றி
செல்வாம்பிகையே போற்றி
வித்தியார்த்திதேவியேபோற்றி
முப்பெரும்தேவியரே போற்றி
ஆதிபராசக்தியே போற்றி போற்றி

ரமணி
வீரகேசரி வாரவெளியீடு 28 09 09


ஈழத்துமுற்றத்துக்கு வந்து நாட்கள்பல கடந்துவிட்டன.நவராத்திரிக்காக கடந்தவருடம் நான் எழுதிபத்திரிகையில்வெளியான கவிதையைமீள்பதிவிடுகிறேன்.
This entry was posted on 8:01 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On September 26, 2009 at 8:56 AM , Olive Tree said...

Hi, it's a great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing!

 
On September 26, 2009 at 9:02 AM , கானா பிரபா said...

நவராத்திரி காலத்தில் வரும் சிறப்பான படைப்பாக இருக்கிறது.

மிக்க நன்றி வர்மா

 
On September 26, 2009 at 2:22 PM , சினேகிதி said...

appo inga aval vadai kadalai panjamirtham ellam tharuveengela??

 
On September 26, 2009 at 9:16 PM , வந்தியத்தேவன் said...

நல்ல கவிதை நவராத்திரிக்கு மிகவும் பொருத்தம்.

//சினேகிதி said...
appo inga aval vadai kadalai panjamirtham ellam tharuveengela??//

தருவோம் தருவோம் ஆனால் நீங்கள் ஜெயஜெய தேவியும் மாணிக்கவீணையும் பாடவேண்டும்.

 
On September 26, 2009 at 9:51 PM , வர்மா said...

பாராட்டியவர்களுக்கு நன்றி. அவல்,வடை,கடலை இல்லாத நவராத்திரியா? கண்டிப்பாகக்கிடைக்கும்
அன்புடன்
வர்மா

 
On September 27, 2009 at 5:15 AM , யசோதா.பத்மநாதன் said...

வர்மா கவிஞரும் என்று இப்போது தானே தெரிகிறது.

எங்கள் ஈழத்து முற்றத்தைப் பற்றியும் ஒரு கவிதை எழுதுங்களேன்.

 
On September 27, 2009 at 8:54 AM , வர்மா said...

மணிமேகலா said...
வர்மா கவிஞரும் என்று இப்போது தானே தெரிகிறது.

எங்கள் ஈழத்து முற்றத்தைப் பற்றியும் ஒரு கவிதை எழுதுங்களேன்.

காலம்கனியும்போது ஈழத்துமுற்றம் பற்றி கண்டிப்பாகஎழுதுவேன்.
அன்புடன்
வர்மா

 
On October 1, 2009 at 6:44 PM , Muruganandan M.K. said...

நவராத்திரி பற்றிய நல்ல கவிதை. பொருத்தமான படைப்பு. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது.