Author: கரவைக்குரல்
•9:42 AM


ஆவணி மாதம் பிறந்துவிட்டால் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு திருவிழா என்று பொதுவாக வடமராட்சி எங்கும் எல்லோரும் கொண்டாட தயாராகிவிடுவார்கள்,நல்லூரானைத் தொடர்ந்து சந்நிதியானுக்குத்தான் திருவிழா பதினைந்து நாள்கள்,அன்னதானக்கந்தன் என்று உலகம் புகழ்பாடும் சந்நிதி முருகனை நோக்கி எல்லோரும் படையெடுப்பர்,சில அடியார்கள் பொதுவாக அங்கேயே இருந்துவிடுவதுண்டு,அங்கேயே இருந்து முருகன் புகழைப்பாடியபடியும் வேண்டிய வரங்களை பிரார்த்தித்தபடியும் கூடியிருப்பர் சந்நிதியின் சந்நிதானத்தில்,
தூக்குக்கவடிகள் பறவைக்காவடிகள் கரகங்கள் இழுவைக்காவடிகள் என்று காவடிகளுக்கும் குறைவில்லை.

குறைவில்லை என்று சொன்னால் அங்கு சென்றவர்களுக்கு தெரியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூக்கு காவடிகள் மற்றும் பறவைக்காவடிகள் வரிசைவரிசையாக வரும்,அவற்றைப்பார்க்கும்போது மயிர்கூர்ச்செறியும்,பக்திரசம் மேலிடும்,கதிர்காமக்கந்தனுக்கும் செல்வச்சந்நிதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இதை சின்னக்கதிர்காமம் அல்லது பால கதிர்காமம் என்று கூட இதை அழைப்பார்கள்,இதை விட அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமம் போன்ற தோற்றப்பாடுடன் கூடிய முகப்புத்தோற்றம் அழகுடன் அமைந்திருக்க முருகப்பெருமானுக்கு இந்தமுறைதிருவிழா சிறப்புடனே நடந்தேறியிருக்கிறது.

இந்த ஆலயத்தில் காணப்படும் விருட்சம் பூவரசு,

மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த விருட்சமும் வணக்கத்துக்குரியதாகும்,எப்போதும் அடியவர்கள் அதனடியில் இருந்தவாறே முருகன் புகழைப்பாடியபடியே பிரார்த்திப்பர்.

அதைவிட பக்திரசச்சொற்பொழிவுகள்,மற்றும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனங்களின் இசை நிகழ்வுகள், என்று இன்னோரன்ன நிகழ்வுகள் முருகன் வீதிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.குறிப்பாக தொண்டைமானாறு ச ந் நிதியான் ஆச்சிரமப்பேரவை இதில் முக்கிய பங்கை வகிப்பதுண்டு.ஆச்சிரமத்தில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானின் வீதிவலத்திற்குப்பின் ஏதாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும்,அதில் முருகன் புகழ் பாடி அதனைத்தொடர்ந்து அன்னதானம் கொடுப்பர்,அவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை வழியில் இப்போது முருக பக்தன் மோகன் அவர்களால் இது பரிபாலிக்கப்பட்டு வருகிறது.இதை விட முருகன் சந்நிதானத்திலும் அடியார்களின் முருகன் இசைப்படலம் இசைக்கபட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படியாக முழுவதும் பக்திமயமாக தொண்டைமானாறு முருகன் வீதியெங்கும் விளங்கும்,

இதைவிட இந்த ஆலயத்தின் பின் புறமாக உள்ள தொண்டைமானாறில் எல்லோரும் நீராடுவதுமுண்டு,
சிறுவர்களும் பெரியவர்களும் நீராடி முருகனின் இறையருளை பெற்றிட வேண்டுவர்.சற்று ஆற்றில் கும்மாளங்க்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவில்லை.
அதைவிடசில பாடசாலைகள் சந்நிதியானின் தேர் மற்றும் தீர்த்ததிருவிழாக்கு விடுமுறை கூட அளித்துவிடும்,சிறியவர்கள் இதில் பெரிய மகிழ்ச்சி,
இப்படியாக சந்நிதியானுக்கு திருவிழா என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருக்கு ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான்,பக்தி பரவசங்களுடன் மகிழ்ச்சிகொண்டாட்டங்களுக்கும் குறைவேயில்லாமல் நிகழும் சந்நிதியான் தீர்த்தமாடி உலகெங்கும் வாழும் எம் தமிழ் மக்களுக்கு அருள்பாலிப்பாராக


பிற்குறிப்பு: இந்த சந்நிதியானின் புகைப்படங்களை எனக்கு அளித்த நண்பர் உமாசங்கார் அவர்களுக்கு நன்றி
This entry was posted on 9:42 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On September 5, 2009 at 11:50 AM , சினேகிதி said...

நல்லாயிருக்கு பதிவும் படங்களும். இந்த ஆத்தில குளிக்கிறது மட்டுமில்ல மீன் வருமென்டு சொல்லிப் பாலத்தில ஏறி தூண்டில் போட்டிட்டு காவல் இருந்திருக்கிறன் ஆனால் மீன் வரேல்ல.

இங்க ரொரன்டோலயும் ஒரு சந்நிதி முருகன் கோயிலிருக்கு. முந்நி சந்நதியில் குருக்களாக இருந்தவருடைய கோயில். 2 நாட்களுக்கு முன்னர் தேர் திருவிழா செய்தார்கள் இங்கும்.

 
On September 7, 2009 at 4:05 PM , கானா பிரபா said...

azhagana pathivu nanri

 
On September 8, 2009 at 9:35 AM , கரவைக்குரல் said...

அப்ப சினேகிதி நீங்களும் அபடியான சுவாரஷ்யமான பதிவத்தரவேண்டும் அல்லவா?
கருத்துக்கு நன்றி

கானா உங்கள் நன்றிக்கு நன்றி

 
On September 16, 2009 at 8:39 AM , Admin said...

உங்கள் வலைப்பதிவு புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.

 
On September 16, 2009 at 8:39 AM , Admin said...

உங்கள் வலைப்பதிவு புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.