•10:55 AM
பூசிப்புணர்த்தி....
பூசிப்புணர்த்தி
அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின் ஒரு இணைச்சொல் «பூசிப்புணர்த்தி». பல ஆண்டுகளாக இந்த இணைச்சொல்லை நான் கேட்கவே இல்லை.எமது பேச்சுவழக்கில் அருகிப்போகும், வண்ணமான இணைச்சொல் தான் இந்த பூசிப்புணர்த்தி.
பூசிப்புணர்த்தல் என்றால் பகட்டாக ஒருவர் தன்னை அலங்கரித்தல் என்ற பொருள்.
பூசி-அழகு சாதனம் கொண்டு முகம், நகம், கண், தலைமயிர் என்பவைகளை அழகு படுத்தி என வரும்.
புணர்த்தல் என்றால் ஒன்று சேர்த்தல், சிருஷ்டித்தல் என்று அகராதிகள் காட்டும்.
அப்படி என்றால்
பூசிப்புணர்த்தி என்றால் முக, நக, கண், தலைமயிர் பூச்சுக்களுடன் மற்றும் தலையலங்காரம், ஆடை அணிகலன்களின் அணிவகுப்பு என பகட்டாக ஒருவர் தம் தோற்றத்தை இன்னும் வடிவாக சோடித்து என்று வரும்.
«பூசிப்புணர்த்திக்கொண்டு சைக்கிளோடை நயினார் எங்கை வெளிக்கிட்டு போனவர்?»
«நீ பூசிப்புணர்த்தி வாறதுக்கிடையிலை அங்கை படம் தொடங்கப்போகுது.»
ந.குணபாலன்
படங்கள்:
௧.வடந்தைக்காலத்தில் தவத்திற்கு போகுமுன் இம்மரம் பூசிப்புணர்த்தி கொண்டு நிற்கின்றது.
௨. இரவு வானத்தை பூசிப்புணர்த்தும் வடதுருவ ஒளி.(NRK நோர்வேய தேசிய ஒலி, ஒளிபரப்பு)
0 comments: