ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவு : இரண்டு ஆண்டுகள், 41 பதிவர்கள், 301 பதிவுகளோடு
ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு , ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ்பேசும் பதிவர்களைத் திரட்டி ஜூன் 5, 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இன்றுடன் 301 பதிவுகளைத் தொடும் ஈழத்து முற்றம் ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், ஆளுமைகள் என்று பல்வேறுவிதமான தலைப்புக்களில் இடுகைகளைப் பகிர்ந்திருக்கின்றோம். இன்னும் பல பதிவுகளோடு இந்தத் தளம் தொடர்ந்தும் இயங்கும் என்று உறுதிபடக்கூறுகின்றோம்.
இன்று 41 பதிவர்களின் பங்களிப்போடு கூட்டுவலைப்பதிவாக இயங்குகின்றது ஈழத்து முற்றம்.
இந்தத் தளம் என்பது தமிழால் ஒன்றுபட்ட ஈழத்துப் பதிவர்கள் தத்தமது பிரதேசத்தின் அடையாளங்களைப் பகிர்வதன் மூலம் தமிழ் உலகின் மற்றய பாகங்களில் வாழும் தமிழ் உறவுகளின் மொழி, பழக்க வழக்கக் கூறுகளோடு ஒப்பு நோக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அத்தோடு ஜோசபின் என்ற தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோசபின் தனது ஆய்வுப்பணிக்காக ஈழத்து முற்றம் குழுமப்பதிவைத் தேர்ந்தெடுத்து ஆய்வைச் சிறப்புற முடித்ததையும் இவ்வேளை மகிழ்வோடு பகிர்கின்றோம்.
இந்தக் குழுமம் மூலம் இன்னும் செழுமையான ஈழத்துப் பதிவர்கள் இணைந்து தம் பகிர்வுகளை அளிக்கவேண்டும் என்பதும் எமது அவாவில் ஒன்றாக இருக்கின்றது. இந்தக் குழுமத்தில் இணைந்து பங்கேற்க விரும்பும் உறவுகள் பின்னூட்டம் வாயிலாக அறியத் தரலாம், ஈழத்து முற்றம் குழுவின் மட்டுறுத்துனர்கள் மூலம் பரிசீலிக்கப்ட்டு, ஆக்கபூர்வமான பதிவர்கள் உள்வாங்கப்படுவர். இதுவரை பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்து பங்களிப்போருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.
ஈழத்து முற்றம் குழுமப் பதிவர்கள் சார்பில்
3 comments:
இது நாள்வரை கவனியாது இருந்துவிட்டேனே!
பாராட்டுக்கள்!
கானா ... எப்படி இணைவது என்பது தெரியவில்லை. மணிமேகலை அக்கா வேறு அழைப்பு விடுவிக்க இல்லை. எழுத தகுதி இருக்கா எண்டும் தெரிய இல்லை ... சோ பம்மிக்கொண்டு இருந்திட்டன்.. சான்ஸ் தருவீங்களா?
ஜேகே
வருக வருக, அழைப்பு அனுப்புகிறேன் :)