Author: இறக்குவானை நிர்ஷன்
•1:36 AM
நமக்கென தனியான கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, விழுமியங்கள் உண்டு. அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

அதனை நெறியாகவும் செம்மையாகவும் செய்யும்பொருட்டும் நடைமுறை உலகோடு பொருந்தும் வகையிலும் யாழ் மண் என்ற இணையத்தளம் இன்றுமுதல் இயங்குகிறது.

இது ஒரு புதிய பரிமாணம்.யாழ் மண்ணின் கலை,கலாசார விழுமியங்களையும் பிரத்தியேக செய்திகளையும் தனித்துவங்களையும் தாங்கி எங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீரகேசரி இணையக்குழுவினருடன் இணைந்து, தூரநோக்கத்துடன் செயலாற்றக்கூடிய ஆசிரிய பீடத்தினரும் தொழில்நுட்ப வல்லுநர்களும் யாழ் மண் இணையத்தளத்தினை மெருகேற்றுகிறார்கள்.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்பேசும் மக்களுக்கு யாழ்ப்பாணம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்குவதாக யாழ் மண் அமைந்துள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு இந்தச் செய்தி சந்தோசம் தருவதாக இருக்கும் என நம்புகிறோம். எப்போதோ விட்டுச்சென்ற மண்ணின் தற்போதைய நிலைவரத்தை யாழ் மண் உங்கள் கண்முன் கொண்டுவரும்.

யாழ் மண்ணுக்கு வாருங்கள். உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லுங்கள். தேவைக்கேற்றவாறு சிறப்பாக அதனை மாற்றியமைப்பதற்கு யாழ் மண் குழுவினர் தயாராக இருக்கிறார்கள்.

-இராமானுஜம் நிர்ஷன்
This entry was posted on 1:36 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On March 31, 2010 at 2:31 AM , Anonymous said...

நல்ல பணி. தொடரட்டுமட்.
-ஊரான்

 
On March 31, 2010 at 5:14 PM , மணிமேகலா said...

தள அறிமுகத்துக்கு நன்றி. சென்று பார்வையிட்டேன்.அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இப்போது தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது என்பதால் என் அபிப்பிராயங்களையும் முன் வைக்கலாம் என்று நம்புகிறேன்.

1.தொடர்பு கொள்ள ஒரு ஈமெயில் முகவரியையும் வைத்திருக்கலாம்.நேரடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருந்திருக்கும்.

2. திகதி ஒரு மாதம் முன்னால் ஓடுகிறது. மே மாதம் என்று இருக்கிறது.கவனிக்கவும்.

3.முக்கியமானதாக நான் சொல்ல நினைக்கும் ஒரு விடயம்.யாழ் மண் என்ற பெயர் பற்றியது.

யாழ்ப்பாணம் என்றால் தமிழர். தமிழர் என்றால் யாழ்ப்பாணம் என்ற ஒரு கருத்து காலம் காலமாகக் காவப் பட்டு வந்திருக்கிறது. கிழக்கு, வன்னி, மலையகம் போன்ற பிரதேசங்களும் அதன் வழக்குகளும் அதன் செழுமையும்,அழகும், வரலாறும், பாரம்பரியங்களும் எங்கே போயின?

இனியேனும் அவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து தமிழரின் வாழ்க்கை முறைகளை, அவர்களின் அழுகைகளை,அழகுகளை தனித்துவங்களை,புன்னகைகளை, உவகைகளை,பெருமைகளைப்,பண்பாட்டின் செழுமைகளைப் பேசும் விதமாகத் தலைப்பை மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல.

(என் ஆதங்கம் இது.நான் யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சி என்பது ஒரு புறமாகவே இருக்கட்டும்)

வீரகேசரி ஆழ வேரூன்றிய ஒரு பத்திரிகை.அதன் வேர்கள் இன்னும் அகல வேரோடி விருட்சமாய் வியாபித்து 'எல்லாத்' தமிழருக்கும் நிழல் தரட்டும்!

வாழ்த்துக்கள்!

 
On April 1, 2010 at 5:00 PM , கானா பிரபா said...

எங்கள் ஊர் விழுமியங்களைக் களஞ்சியப்படுத்தும் இந்தப் பணிக்கு வாழ்த்துக்கள்

 
On April 4, 2010 at 3:49 PM , soorya said...

நானும் போய்ப் பார்த்தன்.
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை.

இது என் தனிப்பட்ட கருத்து.

நன்றி.