Author: மணிமேகலா
•6:32 AM

ஒருகாலம் அது!

முன் விறாந்தை வைத்த மதில் கட்டிய வீடுகளும் மான் கொம்பு பதித்த சுவர்களும் பின்னல் வேலைப்பாடு கொண்ட கதிரைகளும் (அதில் தவறாமல் ஒரு சாய்வு நாற்காலி கொலுவீற்றிருக்கும்) இரண்டு பக்கமும் திறக்கத் தக்கதாகப் திறம் பலகையில் செதுக்கிய சின்ன ஜன்னல் மற்றும் காத்திரமான உள்புறம் திறாங்கு வைத்த வெளிப்புறம் பித்தளைக் குமிழியும் திறப்புத் துவாரமும் கொண்ட கதவுகளும் இரவு நேரத்தில் மங்கலாக எரியும் மின் விளக்குகளும் ஒரு விதமான யாழ்ப்பாணத்து வாழ்வைச் சொல்லும்.

அது போல கிடுகு வேலிக்குள் அல்லது சுற்று மதிலுக்குள் சமத்தாக வீற்றிருக்கும் நாற்சார வீடுகளும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தனிக் களையைக் கொடுத்திருந்தன ஒரு காலம். அது தொலைக்காட்சிகள் அற்றிருந்த காலம்.அப்போதெல்லாம் இரவுச் சமையலும் அடுக்களை வேலைகளும் முடிந்த பின்னால் பக்கத்து வீட்டுக்காரரும் கூடி இரவுச் சமா வைப்பது இப்படியான விறாந்தைகளில் தான். (சமா; கூடி நாட்டு நடப்புகள் மற்றும் விடயங்களைப் பேசுதல்)

அந்த வனப்பையும் வாழ்வையும் கொண்டிருந்த வீடுகளுக்குள் பந்திப்பாய்களும் அண்டா குண்டாக்களும் விஷேச தினங்களுக்காகத் தனியறையிலும் பறன்களிலும் வீற்றிருக்கும்.

அவற்றில் சில இங்கே:கீழே இருப்பது புற்பாய். பந்திப்பாய் இதனைப்போல பாதியளவு இருக்கும். 

அது போல சீனத்து ஜாடிகளும் இருந்தன. அவை ஊறுகாய் மற்றும் பினைந்த புளி ஆகியன போட்டு வைக்கப் பயன் பட்டன.குத்துவிளக்கொன்று சுவாமி அறையில் தவறாமல் இருக்கும்.ஆறு மாணிக்கு கால் முகம் கழுவி விளக்கேற்றி தேவாரம் பாடி படிப்பு மேசைக்கு போக வேண்டியது அனேகமாக எல்லாப் பிள்ளைகளுக்கும் பிறப்பிக்கப் பட்ட கட்டளையாக இருக்கும்.அது போல மண்ணெண்ணையில் எரியும் ஒரு கைவிளக்கு எப்போதும் அடுப்படி பறனில் அவசர தேவைக்காக வீற்றிருக்கும்.


போருக்கு முன்பான யாழ்ப்பாண வீடுகளுக்கென்றிருந்த சில குண இயல்புகள் இவை.

படங்கள்:நன்றி கூகுள் இமேஜ்.

|
This entry was posted on 6:32 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On July 19, 2012 at 3:14 AM , ந.குணபாலன் said...

எங்கள் வளருந் தலைமுறைகளுக்கு இன்னினது இப்படியிப்படி என்று காட்ட உங்கள் பணி உதவுகிறது. நன்றிகள் பல.

 
On July 23, 2012 at 10:37 AM , அம்பாளடியாள் said...

எம் நினைவை விட்டு நீங்காத பொருட்கள் இவை கண்டத்தில் ஓர் ஆனந்தம் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு .

 
On July 26, 2012 at 7:10 PM , மணிமேகலா said...

நன்றி குணபாலன். பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை நிச்சயமாக.ஈழத்து முற்றம்வெறிச்சோடிக்கிடக்கிறது.அவ்வப்போது வந்து போகிறேன்.அவ்வளவு தான்.

பலரும் ஏன் மெளனித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீங்களேனும் ஏதாவது எழுதலாம்.

 
On July 26, 2012 at 7:21 PM , மணிமேகலா said...

மிக்க மகிழ்ச்சி அம்பாளடையாள். ஊரில் அவை இப்போதும் புளக்கத்தில் இருக்கக் கூடும்.

புலம் பெயர்ந்த பின்னாடி இப்படியான சின்னச் சின்ன விடயங்கள் எல்லாம் நாம் இழந்து போனவற்றின் பட்டியலில் இடம் பெற்று விடுவது சற்றே சுவாரிஸமகத் தான் இருக்கிறது இல்லையா?

இந்த அண்டா, குண்டா, குடம் எல்லாம் ஒரு கொண்டாட்டத்தின் பங்காளிகள்!அதன் பின்னால் உறவுகளின் கூட்டம் - Team work! ஒரு வித குடும்ப உறவுகளின் நெருக்கத்தை அவை கொண்டு வரும். இங்கோ பணத்தைக் கட்டி விட்டு நேரத்துக்குப் போனால் போதும் என்றாகி விட்டது.

 
On July 28, 2012 at 3:29 PM , putthan said...

மிகவும் அருமையாக உள்ளது... நன்றிகள்

 
On July 28, 2012 at 3:29 PM , putthan said...

மிகவும் அருமையாக உள்ளது... நன்றிகள்

 
On July 29, 2012 at 4:49 PM , மணிமேகலா said...

மகிழ்ச்சி புத்தன். அடிக்கடி வாங்கோ.

 
On September 5, 2012 at 1:56 AM , தெல்லியூறான் said...

மிகவும் அருமையாக உள்ளது.. எங்கள் பாவனையில் இருந்த முக்குபேணி பற்றிய எனது பதிவையும் பார்க்க

http://thelliyuran.blogspot.co.uk/2012/08/blog-post.html

 
On September 18, 2012 at 6:02 AM , மணிமேகலா said...

மிக்க மகிழ்ச்சி தெல்லியூராரே!

அங்கு வந்தேன்; பார்த்தேன்; மகிழ்ந்தேன். அது போல இன்னும் பல பதிவுகளை நீங்கள் தர வேண்டும்.

மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வாங்கோ.