Author: யசோதா.பத்மநாதன்
•7:08 PM

கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!

அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.

அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.

வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))

எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.




















படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.








|
This entry was posted on 7:08 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On April 15, 2012 at 8:19 PM , Unknown said...

அழகு பொருட்கள்

 
On April 16, 2012 at 5:50 AM , ப.கந்தசாமி said...

அசுர உழைப்பு.

 
On April 16, 2012 at 7:07 AM , Anonymous said...

நல்ல கலக்சன் நண்பரே...

 
On April 16, 2012 at 7:40 AM , விச்சு said...

பாக்குவெட்டியை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. அழகான கலைப்பொருள்.

 
On May 3, 2012 at 10:22 AM , ஹ ர ணி said...

சொல்வதற்குச் சொற்களில்லை சகோதரி. அருமை. காட்சிக்குப் பேரின்பம். எத்தனை வகை பாக்குவெட்டிகள். எத்தனை கலைரசனையாக பண்பாட்டின் வேரிலிருந்து நாம் பிறந்து வளர்ந்து நிற்கிறோம். அருமை. அற்புதம்.

 
On May 4, 2012 at 5:22 PM , யசோதா.பத்மநாதன் said...

கருத்துக்கள் தந்த அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும்.

உண்மை தான் ஹரினி. நானும் அவ்வாறு தான் உணர்ந்தேன்.எத்தனை அழகான கலைப்பாரம்பரியம்!!