Monday, March 7, 2011

மட்டக்களப்புச் சொற்கள்

வெப்பிசாரம்: ஒரு விதமான கோபம். அவன் வராததது எனக்கு வெப்பிசாரமாய் இருக்கிறது.

எம்பிட்டுதல்: அகப்படுதல். அவன் எம்பிட்டுட்டான்.

ஒசில்: இச் சொல் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகு அழகற்றது என்று பொருள்படும். இது ”ஒயில்” என்பதன் திரிபு ஆகும்.

கெளித்தல்: சரித்து ஊற்றுதல்

குமுதம் . குமதம் குத்தல் பேரொளி

சவுத்துப்போதல்: களைத்துப்போதல்

சள்ளு: தொந்தரவு

துமித்தல்: தூறுதல்

தொப்பட்டம்: மழையில் தொப்பட்டமாய் நனைதல். முழுதாய் நனைதல்

வெட்டை: வெளி . வெட்டையால போ- வெளியே போ

சூம்புதல்: மெலிதல். என்னடா சும்பிப் பெயித்தாய் - என்னடா மெலிந்துவிட்டாய்.


சள்ளு : தொந்தரவு

வெள்ளாப்பு: அதிகாலை

படுவான்: மேற்கு.  மட்டக்களப்பின் மேற்குப்பகுதியை படுவான்கரை என்றும் அழைப்பர்.

பறவாதி: அவா கொண்டவன்


கிழக்கிலங்கையில் உள்ள பல இடங்களில் இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். இவர்களினூடாக சில அரபுமொழிச் சொற்களும் தமிழிடைக் கலந்துள்ளது.

ஆலிம்: மார்க்க அறிஞர்
கந்தூரி: அன்னதானம்
கபீர்: பெரியவர்
சாஹிப்: தோழன்
சுன்னத்து: சம்பிரதாய சடங்கு
நஜிஸ்: அசுத்தம்
ஈமான்:; நம்பிக்கை
செய்த்தான்: பிசாசு
நிக்காஹ்: திருமணம்
மத்ர்ரசா: மதபாடசாலை
மௌலவி: மார்க்கப்பண்டிதர்
(b)பலாய்: அநியாயம், கெட்டது

6 comments:

  1. அது எம்பிடுதல் அல்ல "அம்பிடுதல்" என்றே நினைக்கிறேன். திருகோணமலையிலும் இந்தச்சொல் பயன்பாட்டிலுண்டு.

    கிறுகுதல் - திரும்புதல் (ஓடிப்போய் இடப்பக்கமா கிறுகிற்று வா)

    வந்தாவு போனாவு என்று "வு" இல் முடிதல் சில இடங்களில் உண்டு.

    கீர்த்தனாவின் இந்தப்பதிவு அழகான மட்டக்களப்புத்தமிழில் எழுதப்பட்டுள்ளது


    http://keerthanakk.blogspot.com/2007/05/blog-post_25.html

    ReplyDelete
  2. மயூரன்

    எம்புடுதல் என்பதை நம்மூரிலும் பேச்சு வழக்கில் வைத்திருக்கின்றோம். அனேகமாக இது மருவியிருக்கலாம்.

    புதிய பல சொற்களை நானும் அறியக் கூடியதாக இருந்தது நன்றி.

    ReplyDelete
  3. ‘சள்ளு குத்துதல்‘ தமிழ்நாட்டிலும் இருக்கிறது.. என் மகள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை.. நல்ல பகிர்வு, நன்றி.

    ReplyDelete
  4. பல சொற்களை அறிமுகப்படுத்திய்மைக்கு நன்றி. சள்ளடித்தல் என்ற ஒரு சொல் எங்களிடம் பாவனையில் உண்டு.அது கடலை போடுதல் என்று வேணுமென்றால் சொல்லிகொள்ளக்கூடிய அர்த்தமுடையது.

    ReplyDelete
  5. மட்டக்களப்பில் வாழ்ந்திருந்தாலும், பல சொற்கள் அறியாதவையாக இருக்கின்றனவே.

    ReplyDelete
  6. சில சொற்கள் மட்டக்கிளப்பு நண்பர்கள் கதைக்கும் போது அவதானித்தவை. அண்ணே உந்தபாயோடை சுத்துவது என்பது உண்மையா? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

    ReplyDelete