Friday, April 8, 2011

குஞ்சு

குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

"குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "குஞ்சையர்" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; "குஞ்சம்மா", "குஞ்சாச்சி" என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; "குஞ்சித்தம்பி", "சின்னக்குஞ்சு" என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் "குஞ்சு" எனும் சொற்பதம் "சிறிய" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

ஆண் உறுப்பு

தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம்.

விக்கிப்பீடியாவில் நான் எழுதியது.

6 comments:

  1. குஞ்சு என்ற சொற்பதம் ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்று நினைக்கிறேன். தமிழகத்தவரிடையே புழக்கத்தில் இருப்பதைப் பற்றி நான் அறியவில்லை. நல்ல பதிவு

    ReplyDelete
  2. ரொம்பநாளா குஞ்சியப்பு பெயர்க்காரணம் தெரியாம முழிச்சுக்கிட்டிருந்தேன் இப்ப புரிஞ்சுது :)

    ReplyDelete
  3. //தமிழகத்தவரிடையே புழக்கத்தில் இருப்பதைப் பற்றி நான் அறியவில்லை.//

    நானும் அறியவில்லை. யாழ்ப்பாணத்திலும் தற்போதைய பேச்சு வழக்கில் பல சொற்கள் அருகிவருகின்றன.

    ReplyDelete
  4. @ ஆயில்யன்

    பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  5. கடுகும் காரமும் நினைவுக்கு வருகின்றன.

    சின்னதாக அதே நேரம் முழுமையாக தரப்பட்டிருக்கிற கட்டுரை.

    சிறப்பான விளக்கங்கள்.

    இது போல மேலும் பல சொற்களுக்கான விளக்கங்கள் காலம் இப்போது கேட்டிருக்கும் தேவைகள்.

    பயனுடய பகிர்வு.

    ReplyDelete
  6. குஞ்சியப்பு(அருண் உங்களைத்தான்) ,அப்பப்பாவின் தம்பியை குஞ்சுப் பாட்டா என்று அழைக்கும் வழமையும் இருக்கிறது சில இடங்களில்,

    ReplyDelete